இன்ட்லி
Powered by Blogger.

Hot Todays

Saturday, 15 November 2014

வேலைக்கு செல்லும் பெண்களா..? கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்



வேலைக்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

ஏனெனில் வீட்டு வேலைகள், குழந்தைகளை பராமரித்தல், பயணம் என பல்வேறு வேளைகளில் பல மனி நேரங்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.

இதனால், அவர்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துள்ள ஆகாரம் தேவைப்படும். எனவே, நோய்கள் தவிர்க்க நன்றாக சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியமானது.

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஒரு ஆய்வின்படி, இரத்த சோகையால் கிட்டத்தட்ட 1.62 பில்லியன் மக்கள் தொகையில் பெண்கள் மற்றும் இளம் குழந்தைகள் பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, உங்கள் ஆரோக்கியமான உடல் நிலையை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கண்டிப்பாக, பருப்பு, கீரை, முட்டை, மீன், நீர் போன்றவை இருக்க வேண்டும்.

இவை தான் உங்களுக்கான அத்தியாவசியமான உணவுப்பொருட்கள். மற்ற உணவுகளை விட, இந்த உணவுகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உடல் எடையை குறைக்கும் சில எளிய பயிற்சிகள்..!



உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.

சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.

- அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியான உடற்பயிற்சி தான்.

- தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், முதலில் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னால் எழ வேண்டும். அப்போது கால்களையும் முன்னோக்கி தூக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் படிப்படியாக குறையும்.

- தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தரையில் பதித்து, கால் கட்டை விரல்கள் இரண்டையும் தரையில் ஊன்றி போலன்ஸ் செய்து உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக முன்புறமாக மூக்கு தரையில் தொட்டு படி குனிந்து, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலிமை பெறும்..

- ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

- இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

- டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும். இவ்வாறு சிறு பயிற்சிகளை செய்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.
=